மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம்  ரத்து

திருப்பூர்; மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக, வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படும், மருத்துவ பரிசோதனை முகாம், வரும், வரும் ஆக. 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கலெக்டர் அலுவலக அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

கண், காது மூக்கு தொண்டை, எலும்புமுறிவு, நரம்பியல், மனநல மருத்துவர்கள் ஒரே இடத்தில், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து, மருத்துவ பரிசோதனை அறிக்கை அளிக்கின்றனர். அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் அங்கீகாரத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. கடந்த 15ம் தேதி முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக, மொத்தம் 325 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

முதல் கட்டமாக, வரும் ஆக., 14 வரை, 120 முகாம்கள் நடத்தப்பட உள்ளன; ஆக. 15 ம் தேதி சுதந்திர தின விடுமுறை. அதனால், இம்மாதம் 15 முதல், வரும் ஆக., 15 ம் தேதி வரை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் ரத்து செய்யப்படுவதாக, கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிவித்துள்ளார்.

Advertisement