இனி 36 கோடி பேர் கையில் ஏ.ஐ.,

புதுடில்லி:ஏர்டெல் நிறுவனம் அதன் பயனர்களுக்கு 17,000 ரூபாய் மதிப்பிலான 'பெர்பிளெக்சிட்டி ப்ரோ' என்ற ஏ.ஐ., சந்தாவை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு இயங்குதளமான பெர்பிளெக்சிட்டி உடன் ஏர்டெல் நிறுவனம் இதற்காக கூட்டு சேர்ந்துள்ளது. இதையடுத்து, மொபைல், பிராட்பேண்டு மற்றும் டி.டி.எச்., என அனைத்து விதமான சேவைகளை பயன்படுத்தும் 36 கோடி ஏர்டெல் பயனர்களுக்கும், இலவசமாக ஏ.ஐ., பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. ஓராண்டுக்குப் பின் சந்தா தொகை, ஆண்டுக்கு 17,000 ரூபாய் மற்றும் வரிகள் பொருந்தும்.

தற்போதைய 5ஜி தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து, ஏ.ஐ., அனுபவத்தை பயனர்கள் இலவசமாக பெறச் செய்யும் இத்திட்டம், இந்த சேவையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஏர்டெல்லில் இந்த சலுகையை அடுத்து, ஜியோ நிறுவனத்தின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement