'சர்பேஸ் கோட்டிங்' கண்காட்சி வர்த்தக மையத்தில் துவக்கம்

சென்னை:சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், அரிப்பு பாதுகாப்பு, தரை மேற்பரப்பு பொறியியல், பூச்சு, பினிஷிங், சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான நாட்டின் மிகப்பெரிய, 'சர்பேஸ் - கோட்டிங்' கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் துவங்கியது.

நாளை வரை நடக்கும் இந்த கண்காட்சியில், மேற்பரப்பு பூச்சு துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின், 300க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இதில், உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

Advertisement