கொங்கண சித்தர் குகையில் குருவார சிறப்பு பூஜை
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் தவம்புரிந்த குகையில், வாரந்தோறும் வியாழக்கிழமை குருவார சிறப்பு பூஜை நடக்கிறது.
அதன்படி, நேற்று மதியம், 12:00 மணிக்கு சித்தருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. செக்காரப்பட்டி, நாகர்பாளையம், மரப்பரை, குப்பிச்சிபாளையம், மின்னாம்பள்ளி, கல்லுபாளையம், சின்னமணலி, பெரியமணலி, கருங்கல்பட்டி, பருத்திப்பள்ளி, ராமாபுரம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement