ப.பாளையத்தில் திட்டப்பணி மாவட்ட கலெக்டர் ஆய்வு



பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட ஆயக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், நேற்று, கலெக்டர் துர்காமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது, அங்கன்வாடி மையத்திற்கு வருகை தரும் குழந்தைகள் விபரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தார்.


மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை ருசி பார்த்து, உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, கடச்சநல்லுார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி, பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என, அலுவலர்களிடம் அறிவுறுத்தினர். மேலும், பள்ளிப்பாளையம் அடுத்த சந்தைபேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை ஆய்வு செய்தார்.

Advertisement