அங்கன்வாடியில் ஆங்கில வழி கல்வி

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த, ஜெகதாப் மற்றும் நாகரசம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில், அமீகா அறக்கட்டளை சார்பில், இலவச மாண்டிசோரி முறை ஆங்கில வழிக் கல்வியை மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார்.


அமீகா அறக்கட்டளை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய துறையுடன் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 11 அங்கன்வாடி மையங்களில் பயிலும், 330-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச மாண்டிசோரி முறை ஆங்கில வழி கல்வியை வழங்கி வருகிறது. இதுவரை, இந்த அமைப்பு மாவட்டத்திலுள்ள, 6 அங்கன்வாடி மையங்களை புனரமைத்ததுடன், மேலும், 3 மையங்களை புதுப்பித்துள்ளது.

Advertisement