கொட்டகையில் தீ; கன்றுகுட்டி பலி



கோபி, கோபி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 50; வீட்டருகே பனை ஓலையுடன், தகர சீட் வேய்ந்த கொட்டகை அமைத்து, ஐந்து பசு மாடுகள் வளர்த்து வருகிறார். கொட்டகையில், நேற்று மதியம் திடீரென தீப்பற்றியது.


இதையறிந்த பழனிச்சாமி மாடுகள் ஒவ்வொன்றாக பத்திரமாக மீட்டார். தகவலறிந்த கோபி தீயணைப்பு துறையினரும் வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் கொட்டகைக்குள் இருந்த, இரண்டு வயது கன்றுக்குட்டி தீ விபத்தில் பலியாகி விட்டது. மின் கசிவால் தீ விபத்து நடந்ததாக, தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Advertisement