லாரி மீது கார் மோதல் குடும்பத்தில் மூவர் பலி 

நெமிலி:காரின் முன்புற டயர் வெடித்து, லாரி மீது மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இறந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 52, கார் மெக்கானிக்.

இவரது மனைவி லதா, 43, மகன் தினேஷ், 23, ஆகியோருடன், நேற்று காலை 9:30 மணிக்கு, தன் 'நிசான்' காரில், கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு சென்று விட்டு, அரக்கோணம் நோக்கி சென்றனர்.

காரை, தினேஷ் ஓட்டி சென்றார்.

பள்ளூர் அருகே காரின் முன் பக்கம் டயர் வெடித்ததில், கார் நிலை தடுமாறி, எதிரே, அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சிமென்ட் ஏற்றி சென்ற லாரி மீது மோதியது.

இதில், சம்பவ இடத்திலேயே லதா இறந்தார். கார் இடிபாடுகளில் சிக்கியவர்களை நெமிலி போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். இருவரும், மருத்துமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்.

Advertisement