டி.என்.பி.எல்., சார்பில் ரூ.2.13 லட்சம் தளவாட பொருட்கள் வழங்கல்

கரூர், கரூர் மாவட்டம் புகழூர் அருகில் அய்யம்பாளையம் மற்றும் மேல் ஒரத்தை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சார்பில் தளவாட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காகித நிறுவன பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் வழங்கினார்.


தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பை மேம்படுத்திடவும், பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி, 2.13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருக்கையுடன் கூடிய மேஜைகள் மற்றும் தளவாட பொருட்கள் வழங்கப்பட்டன. புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் ரூபா, துணை தலைவர் சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement