சேலம் வழியாக செல்லும் மூன்று ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
சேலம், சேலம் வழியாக செல்லும், மூன்று ரயில்களில் பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியட்டுள்ள அறிக்கை: நாகர்கோவிலில் இருந்து கரூர், நாமக்கல், சேலம் வழியாக கச்சகுடா செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை முதல் கூடுதலாக படுக்கை வசதியுடன் கூடிய, ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் வரும் கச்சகுடா-நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூலை, 20 முதல், படுக்கை வசதியுடன் கூடிய ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.
இதே போல் சென்னை-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூலை 21 முதல், கூடுதலாக ஒரு ஏ.சி. சேர் கார் பெட்டி இணைக்கப்படுகிறது. மறுமார்க்க ரயிலிலும், ஒரு ஏ.சி. சேர் கார் பெட்டி இணைக்கப்படுகிறது.
இதே போல் கே.எஸ்.ஆர்., பெங்களூரு-கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூலை 21 முதல் கூடுதலாக ஒரு டபுள் டெக்கர் ஏ.சி. கோச் இணைக்கப்படுகிறது. மறு மார்க்க ரயிலிலும் ஒரு டபுள் டெக்கர் ஏ.சி. கோச் இணைக்கப்படுகிறது.