பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு

மும்பை: நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் ஹூடாட்மா ஸ்மிருதி மந்திரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஆண்களுக்கு பயிற்சி அளித்தால் அவர் வாழ்நாள் முழுவதும் உழைப்பர். பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் போது, அவர் வேலை பார்ப்பதுடன், அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சியையும் உறுதி செய்வர்.
பெண்கள் தான் மதிப்புகளையும், பாசத்தையும் ஊட்டுகிறார். அவர்களின் பாசத்தில் தான் குழந்தைகள் வளர்கிறார்கள். 12 வயது வரை குழந்தைகள் பெற்றோரின் நிழலில் இருக்கிறார்கள். அது தான் அவர்களின் அடித்தளம் ஆகும். அப்போதுதான் அவர்களின் இயல்பான குணம் உருவாகிறது.
வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர்கள் தொலைந்து போனாலும், இந்த அடித்தளத்துக்கு முயற்சி செய்கிறார்கள். இந்த அடித்தளத்தை வலுப்படுத்துவது தான் முக்கியம். இதைத்தான் தாயார்கள் செய்து வருகின்றனர்.
ஆண்களுக்கு வழங்கிய திறன்களை பெண்களுக்கும் கடவுள் வழங்கி உள்ளார். ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்யலாம். இதனால், பெண்களை உயர்த்துகிறோம் என்ற ஆணவத்துடன் ஆண்கள் பணியாற்றக்கூடாது. பெண்கள் செய்ய விரும்பும் வேலையை அவர்கள் அனுமதித்து அவர்களை திறமையானவர்களாக மாற்ற ஆண்கள் முயற்சிக்க வேண்டும்.
பாரம்பரியக் கட்டுப்பாடுகளில் இருந்து அவர்களை விடுவித்து அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளை வழங்க வேண்டும். இன்று பெண்கள் பல துறைகளில் முன்னணியில் உள்ளனர். நாடு வளர்ச்சி அடைய பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பது முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும்
-
கமகமக்கும் நெத்திலி கருவாடு பாம்பனில் கிலோ ரூ.400
-
எஸ்.எஸ்.ஐ., மயங்கி விழுந்து பலி
-
வாதானுார் கோவில் திருப்பணி துவக்கம்
-
போலி சிம்கார்டு பெற்ற வழக்கில்மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு
-
காமராஜர் இறந்த வீடியோவை பார்த்தால் கருணாநிதி மரியாதை வைத்தது தெரியும் சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி
-
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு