நொறுக்குகள்
உருளைக்கிழங்கை குளிர்ச்சியான தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்த பின், வறுத்தால் மொறு மொறுப்பாக இருக்கும்.
பாஸ்தா அதிகமாக வெந்துவிட்டால், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து பாஸ்தாவை சேர்த்து வறுத்து எடுக்கும்போது, பாஸ்தா வழக்கம் போல இருக்கும்.
சாம்பார் செய்யும்போது இறுதியாக சிறிதளவு தேங்காய், சின்ன வெங்காயத்தை அரைத்து ஊற்றினால் சுவை மேலும் அதிகமாகும்.
அடை தோசை மாவில் ஒரு உருளைக்கிழங்கை மசித்து சேர்த்தால், அடை தோசை சுவை நன்றாக இருக்கும்.
பச்சைப்பயிர் முளை கட்டுவதற்கு அதை ஊற வைத்து ஹாட் பாக்சில் போட்டு வைக்கலாம்.
முருங்கைக்காய் அதிகமாக வாங்கிவிட்டால், அதை அப்படியே வைக்காமல், சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் காய்ந்து போகாமல் இருக்கும்.
ஊறுகாய் செய்யும்போது, கடுகு எண்ணெய்யை ஊற்றிவிட்டால் எளிதில் கெட்டுப் போகாது.
போளிக்கு மாவு செய்யும்போது ஆறு மணி நேரம் ஊறவைத்தால் சுவை அதிகரிக்கும்.
உப்புமா உதிரி உதிரியாக வருவதற்கு சுடு தண்ணீர் ஊற்றி செய்ய வேண்டும்.
வத்தல் குழம்பு செய்யும்போது, கடுகு தாளித்தவுடன் எண்ணெய்யில் மிளகாய் பொடி போட்டு வதக்கி, புளியை கரைத்து விட்டால், குழம்பு நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
கீரை குழம்பு செய்யும்போது, அரிசி கழுவிய தண்ணீரை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
காளிபிளவர் செய்யும் போது தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்தால் காளிபிளவர் வெண்மையாக இருக்கும்