விமான விபத்து சம்பவத்தில் வங்கதேசத்துக்கு உதவ தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு

8

புதுடில்லி: விமான விபத்து சம்பவம் தொடர்பாக வங்கதேசத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


@1brவங்கதேச விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் பள்ளியில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:


டாக்காவில் நடந்த ஒரு துயரமான விமான விபத்தில் பல இளம் மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.


காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். சாத்தியமான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement