அடிப்படை வசதி இல்லாத கணபதி நகரில் மக்கள் அவதி

கரூர், கரூர் நகரின் மையப்பகுதியான கணபதி நகரில், அடிப்படை வசதியின்றி மக்கள் தவிக்கின்றனர்.

கரூர் மாநகராட்சி, சுங்க கேட் அருகே கணபதி நகர், கலைஞர் நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதே பகுதியில் பசுபதிபாளையம் போக்கு வரத்து போலீஸ் ஸ்டேஷனும் செயல்படுகிறது. மழை பெய்யும் போது, அந்த பகுதியில் மழை நீருடன், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் சேருகிறது.

இப்பகுதியில் தார்ச்சாலை இல்லை. மண் சாலையில்தான் வீடுகளுக்கு நடந்து செல்ல வேண்டும். மழை காலங்களில் வீட்டை வெளியே செல்ல முடியாது. போதிய சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கும். இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தேங்கிய நீரில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருகிறது. மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் எரிவது இல்லை.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என, அப்
பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Advertisement