கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்


கரூர், இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது என, கலெக்டர்

தங்கவேல் தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (22ம் தேதி) நடக்கிறது.

இதில், கரூர் மாநகராட்சி காந்திகிராமத்தில் உள்ள, மூன்றாவது மண்டல அலுவலகத்தில், வார்டு எண் 38க்கும், பழைய ஜெயகொண்ட சோழபுரம் டவுன் பஞ்., சமுதாய கூடத்தில் வார்டு, 1, 2, 3, 4, 5, 6, 7க்கு, கருப்பம்பாளையம் பஞ்சாயத்துக்கு, ஏ.கே. பாரதி நகர் சமுதாய கூடத்திலும், திருக்காட்டுத்துறை பஞ்சாயத்துக்கு, இளங்கோ நகர் திருமலை மஹாலிலும் முகாம் நடக்கிறது. பொதுமக்கள் தங்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில், மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் கோரிக்கை தொடர்பாக மனு அளிக்கலாம்.

Advertisement