பறிமுதல் லாரியிலிருந்து பேட்டரி திருட்டு தெருவில் இருந்து அகற்றுவதில் சிக்கல்

உத்தரமேரூர், உத்திரமேரூரில் தெருவின் நடுவிலே நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் லாரியில் உள்ள மூன்று டயர் பஞ்சர் ஏற்பட்டு, பேட்டரியும் திருடப்பட்டு உள்ளதால் அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, சின்ன நாரசம்பேட்டை தெருவில், காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், கஞ்சா, சாலை விபத்துகளில் சிக்கிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை காவல் நிலையம் எதிரே உள்ள, சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்தி வருகின்றனர்.
அவ்வாறு வாகனங்களை நிறுத்த அங்கு போதிய இடம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்று, இரண்டு மாதமாக, சக்கரம் கோதண்டராமர் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த லாரியில் உள்ள மூன்று டயர் பஞ்சர் ஏற்பட்டு, பேட்டரியும் திருடப்பட்டுள்ளது. இதனால், லாரியை தெருவிலிருந்து அகற்ற முடியாத சூழல் உள்ளது.
எனவே, சக்கரம் கோதண்டராமர் தெருவில் நிறுத்தப்பட்டுள்ள, பறிமுதல் லாரியை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
போலீசார் என்னை துன்புறுத்தவில்லை கோர்ட்டில் குண்டுவெடிப்பு கைதி பதில்
-
துாண், பீம், தளத்தில் விரிசல் ஏற்பட்டால் கட்டுமான நிறுவனமே பொறுப்பு: ரியல் எஸ்டேட் ஆணையம்
-
தங்கள் வீட்டில் ஒருவராக என்னை தமிழக பெண்கள் நினைக்கின்றனர்: முதல்வர் மனைவி துர்கா பெருமிதம்
-
இன்றைய மின் தடை பகுதிகள்
-
செய்திகள் சில வரிகளில்
-
தெருநாய்களுக்கு இருப்பிடம் பா.ஜ.,வின் ரமேஷ் வலியுறுத்தல்