சீரமைத்த சில மாதங்களிலேயே சிதிலம் அடைந்த பினாயூர் சாலை

பினாயூர், பினாயூரில், சீரமைத்த சில மாதங்களிலேயே பழுதான சாலையை, மீண்டும் புனரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூரில் இருந்து, அப்பகுதி மலையடிவாரம் வழியாக பழையசீவரம் சென்றடையும் சாலை உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள், இச்சாலை வழியை பயன்படுத்தி வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலை மிகவும் பழுதடைந்து இருந்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.57 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டது. சீரமைப்பு பணி மேற்கொண்ட சில மாதங்களிலேயே தரமற்ற பணி மற்றும் அப்பகுதியில் இயங்கும் தனியார் கல் அரவை தொழிற்சாலை கனரக வாகனங்கள் இயக்கத்தால் சாலை மீண்டும் சேதம் அடைந்தது.
அச்சாலை தார் பெயர்ந்து ஜல்லி கற்கள் குவிந்து மீண்டும் பழைய நிலையில் மாறி உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர். அடுத்த சில மாதங்களில் பருவ மழை துவங்க உள்ளதால், சாலை மேலும் சேதமாகி பயன்பாட்டிற்கு லாயக்கற்றதாகி விடும் நிலை உள்ளது.
எனவே, இச்சாலையை மீண்டும் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
துாண், பீம், தளத்தில் விரிசல் ஏற்பட்டால் கட்டுமான நிறுவனமே பொறுப்பு: ரியல் எஸ்டேட் ஆணையம்
-
தங்கள் வீட்டில் ஒருவராக என்னை தமிழக பெண்கள் நினைக்கின்றனர்: முதல்வர் மனைவி துர்கா பெருமிதம்
-
இன்றைய மின் தடை பகுதிகள்
-
செய்திகள் சில வரிகளில்
-
தெருநாய்களுக்கு இருப்பிடம் பா.ஜ.,வின் ரமேஷ் வலியுறுத்தல்
-
40 - 50 கி.மீ., வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும்