சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்திரமேரூர் மக்கள் வலியுறுத்தல்

உத்திரமேரூர், உத்திரமேரூரில், சாலையோரத்தில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வாகன ஓட்டிகள், மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து, வந்தவாசி, போளூர் செல்லும் வாகனங்கள் புக்கத்துறை, நெல்வாய் வழியாக, உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள மானாம்பதி சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றன.

இந்த சாலையின் இருபுறமும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து புதிய கடைகள் மற்றும் விளம்பர பலகைகளை அமைத்து வருகின்றனர். அதேபோல, காஞ்சிபுரம் செல்லும் சாலையோரங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றன.

இதனால், கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்லும் போது இடையூறு ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாமல் நெடுஞ்சாலைத் துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

எனவே, சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement