சிறப்பு மைய மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கல்

சிறுகாவேரிபாக்கம்,சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள பூங்காவனம் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மைய மாணவர்களுக்கு கல்வி உபகரணம் மற்றும் சீருடை வழங்கும் விழா நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிப்பாக்கத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் சார்பில், பள்ளி செல்லா, பள்ளி இடைநின்ற குழந்தை, குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பூங்காவனம் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

இங்கு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன தலைவர் டாக்டர் கல்பனா சங்கர், முதன்மை செயலாக்க அலுவலர் சஹானா சங்கர் ஆகியோர் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பள்ளி பை, எழுதுப்பொருட்கள், புதிய சீருடை வழங்கினர்.

துணை தலைவர் பிரேம் ஆனந்த், உதவி பொது மேலாளர் மோகனவேல் முதுநிலை திட்ட மேலாளர் துாயவன், பள்ளி பொறுப்பாளர் புகழேந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement