அர்ஜுன் 6வது இடம்: 'பிரீஸ்டைல்' செஸ் தொடரில்

லாஸ் வேகாஸ்: 'பிரீஸ்டைல்' செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜுன் 6, பிரக்ஞானந்தா 7வது இடம் பிடித்தனர்.
அமெரிக்காவின் லாஸ் வேகாசில், 'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடந்தது. இதில் அரையிறுதி வரை முன்னேறிய இந்தியாவின் அர்ஜுன், 5-6வது இடத்துக்கான போட்டியில் அமெரிக்காவின் பேபியானோ காருணாவை சந்தித்தார். இரண்டு போட்டியிலும் ஏமாற்றிய அர்ஜுன் 0-2 என தோல்வியடைந்து, 6வது இடம் பிடித்தார்.
பின் 7-8வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சோ வெஸ்லி மோதினர். முதல் போட்டியை 'டிரா' செய்த பிரக்ஞானந்தா, 2வது போட்டியில் வெற்றி பெற்றார். முடிவில் பிரக்ஞானந்தா 1.5 - 0.5 என வெற்றி பெற்று, 7வது இடத்தை தட்டிச் சென்றார்.
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 1.5 - 0.5 என, அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை தோற்கடித்தார். பைனலில் அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் 1.5 - 0.5 என சகவீரர் ஹான்ஸ் மோக் நீமனை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார்.
மேலும்
-
கழுத்தை அறுத்து 7 வயது மகளை கொன்ற கொடூரம்; தற்கொலைக்கு முயன்ற தந்தை 'சீரியஸ்'
-
அரசு மருத்துவமனையில் கைதி வார்டுகள் தயார்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 23 க்குரியது
-
அஞ்சல் துறை பணிகளில் புது தொழில்நுட்பம் அறிமுகம்
-
சிறுதானிய இயந்திரம் மானியத்தில் பெறலாம்
-
மனு வாங்கி மக்களை ஏமாற்றும் தி.மு.க., அரசு உதயகுமார் சாடல்