மல்யுத்தம்: இந்தியாவுக்கு 10 பதக்கம்

புடாபெஸ்ட்: ஹங்கேரி மல்யுத்த தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 10 பதக்கம் கிடைத்தது.
ஹங்கேரியில், 'ரேங்கிங் சீரிஸ்' சர்வதேச மல்யுத்த தொடர் நடந்தது. ஆண்களுக்கான 'கிரிகோ-ரோமன்' 60 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சுமித், 'நடப்பு உலக சாம்பியன்' அஜர்பெய்ஜானின் நிஹாத் மம்மட்லி மோதினர். ஆசிய சாம்பியன் (23 வயது) பட்டம் வென்ற சுமித், 1-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
'கிரிகோ-ரோமன்' 55 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அனில் மோர், உஸ்பெகிஸ்தானின் இக்தியோர் போதிரோவ் மோதினர். இதில் அனில் 7-4 என வெற்றி பெற்று வெண்கலத்தை தட்டிச் சென்றார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என, மொத்தம் 10 பதக்கம் கிடைத்தது. பெண்கள் பிரிவில் இந்திய அணி 130 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மேலும்
-
வீரேந்திர ஹெக்டே பற்றி செய்தி வெளியிட தடை; 8,000 வீடியோக்களை அழிக்கவும் கோர்ட் உத்தரவு
-
பாகிஸ்தானுக்கான ஈரான் துாதரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்
-
கழுத்தை அறுத்து 7 வயது மகளை கொன்ற கொடூரம்; தற்கொலைக்கு முயன்ற தந்தை 'சீரியஸ்'
-
அரசு மருத்துவமனையில் கைதி வார்டுகள் தயார்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 23 க்குரியது
-
அஞ்சல் துறை பணிகளில் புது தொழில்நுட்பம் அறிமுகம்