10ம் வகுப்பு மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை

திருநெல்வேலி; எப்போதும் அலைபேசி பார்த்துக் கொண்டிருக்காதே என தாயார் திட்டியதால் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் 10ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பத்தமடை அம்பேத்கர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் தாஸ். பெயிண்டர். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களது மகள் இஹாஷினி 15. அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவர் வீட்டில் இருந்த போது அதிக நேரம் அலைபேசி பயன்படுத்திக் கொண்டிருந்தார். தாயார் இதனை கண்டித்தார். இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய இஹாஷினியை காணவில்லை. நேற்று காலை அதே தெருவில் உள்ள ஒரு கிணற்றில் சீருடையுடன் இஹாசினி உடல் மிதந்தது. அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பத்தமடை போலீசார் விசாரித்தனர்.

Advertisement