சென்னை - லக்னோ ரயிலில் எல்.எச்.பி., பெட்டி இணைப்பு

சென்னை, சென்னை - உத்தரபிரதேச மாநிலம், லக்னோ இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில், வரும் 26ம் தேதி முதல், எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன.

விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, எல்.எச்.பி., எனப்படும் நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது; அதிர்வுகள் இன்றி சொகுசாக பயணிக்கலாம்.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - உத்தரபிரதேச மாநிலம், லக்னோ இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில், வரும் 26ம் தேதி முதல், எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement