பஸ் ஸ்டாப்பில் நிற்காத பஸ்; வாக்குவாதம்
வேடசந்துார்: கல்வார்பட்டி, வேடசந்துார் நெடுஞ்சாலை வழியாக தனியார் பஸ் திண்டுக்கல் சென்று வருகிறது. இந்த பஸ் கரூரிலிருந்து இரவு 9:10 மணிக்கு கல்வார்பட்டி வருகிறது.
நேற்று முன்தினம் பயணிகள் பஸ் ஸ்டாப்பில் நிற்க பஸ் நெடுஞ்சாலை வழியாக சென்று விட்டது.
ஆத்திரமடைந்த மக்கள் இரவு 9:15 மணிக்கு பஸ் வந்தபோது நெடுஞ்சாலை வழியாக சென்றது குறித்து கேட்டதோடு, கல்வார்பட்டி பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல கூற டிரைவர் கதிர்வேல், நடத்துனர் ராமச்சந்திரனிடம் கூறி வாக்குவாதம் ஏற் பட்டது.
கோபமடைந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பஸ் டிரைவரும் குறுக்கே நிறுத்தியதால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.
நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சமாதானம் செய்து பஸ்ஸ்டாப்பில் நின்று செல்லுமாறு டிரைவரிடம் கூறி பஸ்சை அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement