வடிவேலு காமெடி போல செயல்படும் பழனிசாமி

2

நாட்டில் மதசார்பின்மை என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. பா.ஜ., ஆளும் மாநிலங்கள் தவிர, பிற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில், மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., - -பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அமைச்சரவையில் பா.ஜ., இடம் பெறும் என அமித் ஷா கூறுகிறார். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும் என்கிறார்.


திரைப்படங்களில் நடிகர் வடிவேலு காமெடி போல, தன்னைத்தானே தலைவர், தலைவர் என்று பழனிசாமி கூறிக் கொள்கிறார். அவருடன் கூட்டணி வைக்க எந்த கட்சிக்கும் விருப்பமில்லை. தி.மு.க., கூட்டணியில் பிளவு ஏற்படாதா என காத்திருக்கும் பழனிசாமி எண்ணம் பொய்த்துத்தான் போகும்.




- முத்தரசன், மாநில செயலர், இந்திய கம்யூ.,

Advertisement