என் கூட்டணி தான் பெருசு; மாநாட்டில் அறிவிக்கிறேன் என சீமான் சூசகம்!

12


சென்னை: ''தமிழகத்தில் பெரிய கூட்டணி என்னுடையது தான். 8 மாதங்கள் பொறுத்திருங்கள். மாநாட்டில் அறிவிக்கிறேன்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


விழுப்புரத்தில் நிருபர்கள் சந்திப்பில், சீமான் கூறியதாவது: தி.மு.க.,வை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான். எல்லாத்தையும் வீழ்த்த வேண்டும் என்று இருக்கிறோம். எங்களுக்கு ஒரு கோட்பாடு இருக்கிறது. ஒரு தீமைக்கு மாற்று ஒரு தீமை அல்ல. நெருப்பை, நெருப்பால் அணைக்க முடியாது. நெருப்பை அணைக்கு நீர் யார் என்று இருக்கிறது.


நாங்கள் நீராக இருப்போம். இந்திய கட்சிகளின் தேவையை ஏன் ஏற்படுத்துகின்றனர்.
இந்த மண்ணிற்கும், மக்களுக்குமான தேவைகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் நிறைவேற்றி இருந்தால், அந்த கட்சிகள் இந்த நிலத்திற்கு வர வேண்டிய, உருவாக வேண்டிய நிலை ஏன் உருவாகிறது.


வலிமை மிக்க காவல்படையை வைத்திருக்கும் நாம், சி.பி.ஐ., விசாரணை கேட்கும் போது, நம்மிடம் இருக்கும் போலீசாரை விட மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்களிடம் உள்ள சி.பி.ஐ., சிறப்பாக விசாரிக்கும். நீதியை நிலைநாட்டும், உண்மையை வெளி கொண்டு வரும் என்றால், அரசே, ஆட்சியாளர்களே கேட்பதே எப்படி எடுத்து கொள்ள முடியும். இந்திய கட்சிகள் தமிழகத்திற்கு ஏன்? தேவை ஏன் என்று சொல்லுங்கள்.


காவிரி நதி நீரில் எனக்காக நிற்குமா? கர்நாடகாவில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்று சொல்வது காங்கிரசும், பா.ஜ.,வும் தான். தமிழ்மொழி மீட்சி, வீழ்ச்சி, நிலத்தின் வளத்தை காக்க நிற்குமா? தமிழகத்தில் பெரிய கூட்டணி என்னுடையது தான். 8 மாதங்கள் பொறுத்திருங்கள்; மாநாட்டில் அறிவிக்கிறேன்; நான் பா.ஜ.,வின் B டீம் என்றால், A டீம் என்று ஒன்று இருக்கும் தானே? அது தான் தி.மு.க., இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement