போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்சுகளில் பிரச்னையில்லை : ஏர் இந்தியா அறிக்கை

மும்பை: போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வுப்பணிகள் முடிந்துவிட்டன. அந்த அமைப்புகளில் எந்த பிரச்னையும் கண்டறியப்படவில்லை என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது. இது விவாதத்தை கிளப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட போயிங் 787, 737 ட்ரீம்லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளை கட்டாயமாக ஆய்வு செய்ய வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் இந்த ஆய்வை முடித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், போயிங் 787 மற்றும் போயிங் 787 விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்புகளில் நடந்த சோதனை எந்த பிரச்னையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா, நீண்ட தூர பயணங்களுக்கு 787 போயிங் ஜெட் விமானங்களை பயன்படுத்துகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், போயில் 737 ஜெட் விமானங்களையும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.



மேலும்
-
சைபர் மோசடியில் ரூ.22,845 கோடியை இழந்த இந்தியர்கள்!
-
ரூ.101 கோடி பண மோசடி: பீஹாரில் வங்கி அதிகாரி கைது
-
அயர்லாந்தில் இந்தியர் மீது தாக்குதல்: மர்ம நபர்கள் அட்டூழியம்
-
ஜூலை 25ல் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்: அன்புமணி அறிவிப்பு
-
பீஹாரில் 51 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்; தேர்தல் கமிஷன் நடவடிக்கை
-
சர்வதேச அளவில் திருப்பதி கோவில்: விரிவாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு