சூரத் விமான நிலையத்தில் 28 கிலோ தங்கம் பறிமுதல் : துபாயில் இருந்து கடத்தி வந்த தம்பதி கைது

6

சூரத்: பேஸ்ட் வடிவத்திலான 28 கிலோ தங்கத்தை உடலில் மறைத்துக் கட்டி, துபாயில் இருந்து கடத்தி வந்த குஜராத் தம்பதியை, சூரத் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து ஏர் இந்தியா ஐஎக்ஸ்-174 விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்திறங்கிய ஒரு தம்பதி மீது சந்தேகமடைந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர், அவர்களை சோதனையிட்டனர்.

தம்பதியரை சோதித்ததில் அவர்களின் உடல்பகுதியில் நடுப்பகுதி மற்றும் மேல் உடல்பகுதிகளில் மொத்தம் 28 கிலோ தங்க பேஸ்ட் மறைத்து கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் அந்த ஆணிடம் 12 கிலோ தங்கமும், பெண்ணிடமிருந்து 16 கிலோ தங்கமும் இருந்தது.
மொத்தம் 28 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் குஜராத்தை சேரந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சூரத் விமான நிலைய வரலாற்றில் இதுவே மிகப்பெரிய தங்க கடத்தலாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement