சர்வதேச அளவில் திருப்பதி கோவில்: விரிவாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு

ஐதராபாத்: உலகின் பல்வேறு நாடுகளில் கோவில்களை புதிதாக கட்டும் வகையில், திருப்பதி தேவஸ்தானம் விரிவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்நிலையில் திருப்பதி வெங்கடாஜலபதி, கோவில்களை பல்வேறு நாடுகளில் கட்டுவதன் மூலம் உலகளாவிய தடங்களை விரிவுபடுத்த முடிவு எடுத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அன்னமய்யா பவனில் இன்று நடைபெற்ற வாரியக் கூட்டத்தில், யாத்ரீகர் சேவைகள் மற்றும் நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதற்கான பிற முடிவுகளும் எடுக்கப்பட்டன.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வாரிய தலைவர் பி.ஆர். நாயுடு கூறியதாவது:
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் விரிவாக்க முடிவு, திருமலையின் ஆன்மிக மரபை சர்வதேச அளவில் சென்றடைவதில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவை பின்பற்றுகிறது. இந்த விரிவாக்கம் தொடர்பாக, ஏற்கனவே ஒரு நிபுணர் குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் இதை முழுமையாக மறுபரிசீலனை செய்ய, தற்போது ஒரு பிரத்யேக துணைக் குழு அமைக்கப்படும்.
இவ்வாறு பி.ஆர்.நாயுடு கூறினார்