யுனெஸ்கோ அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

வாஷிங்டன்: யுனெஸ்கோ அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் கூறுகையில், யுனெஸ்கோ அமைப்பில் தொடர்ந்து நீடிப்பது, அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு உகந்ததாக இல்லை. இந்த அமைப்பு பிளவுபடுத்தும் சமூக மற்றும் கலாசார காரணங்களை பின்பற்றுகிறது. பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அனுமதிப்பது என்ற யுனெஸ்கோவின் முடிவு சிக்கலானது. அமெரிக்காவின் கொள்கைக்கு முரணானது. இந்த அமைப்புக்குள் இஸ்ரேல் எதிர்ப்பு கொள்கையை பின்பற்றுகிறது எனத் தெரிவித்துள்ளார்.


இதற்கு முன்பு, டிரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்த போது 2017 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பில் இருந்து வெளியேறியது. ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பிறகு மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டது.

Advertisement