போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; புடினை சந்தித்து பேச தயார் என்கிறார் ஜெலன்ஸ்கி

கீவ்: ''போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புடினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன்'' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷ்யா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார். அதேநேரத்தில், பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்கஅதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வர முயற்சி செய்கிறார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புடினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன். உக்ரைன் இந்த போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும் போரை தொடங்கிய ரஷ்யா தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக, ரஷ்ய அதிகாரிகள் கூறியதாவது:
உயர்மட்ட சந்திப்புகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு முன்பு, நிறைய வேலைகள் செய்ய வேண்டும். இது தொடர்பாக, விரைவில் ஒரு உச்சிமாநாடு நடை பெறும். ரஷ்யா தற்போது உக்ரைனில் பல்வேறு பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
டிரம்ப் நிர்வாகம் அமைதி முயற்சிகளை முன்னெடுக்க முயற்சித்த போதிலும், புடின் பேச்சுவார்த்தை நடத்த உடன்படவில்லை. ரஷ்யப் படைகள் இரவில் உக்ரைனில் பல்வேறு இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.








மேலும்
-
மேகதாது திட்டத்தை சோனியாவிடம் சொல்லி நிறுத்த வேண்டியது தானே; திமுகவை கேட்கிறார் இ.பி.எஸ்.,
-
துணை ஜனாதிபதி தேர்தல் வரலாறு: 4 முறை மட்டுமே போட்டியின்றி தேர்வு
-
6 மாதங்களில் 26,770 பேர்; சாலை விபத்துகளில் உயிரிழந்த பரிதாபம்!
-
சீனர்களுக்கு சுற்றுலா விசா: 5 ஆண்டுகளுக்கு பிறகு வழங்குகிறது இந்தியா
-
உலகின் டாப் 10 பட்டியலில் மும்பை விமான நிலையம்: தொடர்ந்து 3ம் ஆண்டாக சாதனை
-
பழனிசாமிக்கு யாரோ சொல்லித்தருகிறார்கள்: கண்டுபிடித்தார் திருமாவளவன்