பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி: இந்தியா -- பிரிட்டன் இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து லண்டனில் நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசுமுறை பயணமாக பிரிட்டன் மற்றும் மாலத்தீவுகளுக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார்.
இந்த சுற்றுப் பயணத்தின்போது இந்தியா - பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை நேற்று வழங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக உடன்பாடு எட்டுவது தொடர்பான அறிவிப்பு, மே 6ல் வெளியானது.
அதன்படி தோல் ஆடைகள், காலணிகள், ஜவுளிப் பொருட்களுக்கான ஏற்றுமதியில் வரிகள் நீக்கப்பட உள்ளன. அதே போல் பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகும் மதுபானங்கள், கார்களுக்கான வரியும் நீக்கப்படுவதால், இனி இவற்றின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனுக்கு இன்று புறப்பட்டுச் செல்லும் பிரதமர் மோடி, லண்டனில் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டாமரை சந்திக்கிறார்.
அப்போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். மோடியுடன், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயலும் செல் கிறார்.
மேலும்
-
மேகதாது திட்டத்தை சோனியாவிடம் சொல்லி நிறுத்த வேண்டியது தானே; திமுகவை கேட்கிறார் இ.பி.எஸ்.,
-
துணை ஜனாதிபதி தேர்தல் வரலாறு: 4 முறை மட்டுமே போட்டியின்றி தேர்வு
-
6 மாதங்களில் 26,770 பேர்; சாலை விபத்துகளில் உயிரிழந்த பரிதாபம்!
-
சீனர்களுக்கு சுற்றுலா விசா: 5 ஆண்டுகளுக்கு பிறகு வழங்குகிறது இந்தியா
-
உலகின் டாப் 10 பட்டியலில் மும்பை விமான நிலையம்: தொடர்ந்து 3ம் ஆண்டாக சாதனை
-
பழனிசாமிக்கு யாரோ சொல்லித்தருகிறார்கள்: கண்டுபிடித்தார் திருமாவளவன்