உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 66 வது இடம்

புது டில்லி: பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா, 2025ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாகக் கண்டறியப்பட்டதாக நம்பியோ கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற விகிதங்கள், பொது பாதுகாப்பு குறித்த கருத்துக்கள், சமூகக் காவல் பணியில் உள்ள சவால்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பயன்படுத்தி நம்பியோ குறியீட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளது.
நம்பியோ குறியீட்டு தரவுகள் அடிப்படையில்,
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), கத்தார் மற்றும் ஓமன் உள்ளிட்ட மூன்று மத்திய கிழக்கு நாடுகள், மிகக் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்ட உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாகவும், மிகவும் வலுவான பாதுகாப்பு உள்கட்டமைப்புடனும் இருப்பதாக தெரியப்படுத்தி உள்ளது.
இந்த தரவு இந்தியாவை, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை விட உயர்ந்த இடத்தில் தரவரிசைப்படுத்தியுள்ளது, அவை பாரம்பரியமாக நிலையான மற்றும் பாதுகாப்பான நாடுகளாகக் கருதப்படுகின்றன.
அமோன் 147வது இடத்தில், இந்தியா 66வது இடத்தில் (மதிப்பெண்: 55.7), இங்கிலாந்து 87வது இடத்தில் (மதிப்பெண்: 51.7) மற்றும் அமெரிக்கா 89வது இடத்தில் (மதிப்பெண்: 50.8) உள்ளன. தெற்காசிய நாடுகளில், சீனா (மதிப்பெண்: 76.0) 15வது இடத்திலும், இலங்கை (மதிப்பெண்: 57.9) 59வது இடத்திலும், பாகிஸ்தான் (மதிப்பெண்: 56.3) 65வது இடத்திலும், வங்கதேசம் (மதிப்பெண்: 38.4) 126வது இடத்திலும் உள்ளன.
2025ம் ஆண்டின் உலகின் முதல் 10 பாதுகாப்பான நாடுகள்:
அன்டோரா- 84.7 புள்ளிகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- 84.5
கத்தார்- 84.2
தைவான்- 82.9
ஓமன்- 81.7
ஹாங்காங் (சீனா)- 78.5
சிங்கப்பூர்- 77.4
ஜப்பான்- 77.1
பாதுகாப்பு மதிப்பெண்ணுடன்
தரவுகளின்படி, தென் அமெரிக்க நாடான வெனிசுலா 2025 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த பாதுகாப்பான நாடாக உள்ளது.
இந்தியாவின் மேற்கு அண்டை நாடான ஆப்கானிஸ்தானும் 144 வது இடத்தில் மோசமான தரவரிசையில் இருந்தது, அதே நேரத்தில் உள்நாட்டு அமைதியின்மை போரில் சிக்கித் தவிக்கும் சிரியா 140வது இடத்தைப் பிடித்தது.
உலகின் முதல் 10 குறைந்த பாதுகாப்பு நாடுகள்:
வெனிசுலா-19.3
பப்புவா நியூ கினியா: 19.7
ஹைட்டிஜ- 21.1
ஆப்கானிஸ்தான்- 24.9
தென்னாப்பிரிக்கா- 25.3
ஹோண்டுராஸ்- 28.0
டிரினிடாட் மற்றும் டொபாகோ- 29.1
சிரியா: 31.9
ஜமைக்கா-32.6
பெரு-32.9
இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும்
-
தமிழகத்தில் யாரும் நிம்மதியாக இல்லை
-
ஏ.டி.ஜி.பி.,க்கு சம்மன் அனுப்பாதது ஏன்? சி.பி.சி.ஐ.டி.,க்கு ஐகோர்ட் கேள்வி
-
யமஹா 'எப்.இசட்., எக்ஸ் ஹைபிரிட்'
-
'2 சீரிஸ் கிராண்ட் கூபே' பி.எம்.டபுள்யூ.,வின் முதல் '3 சிலிண்டர்' இன்ஜின் கார்
-
ஹூப்பள்ளி - சென்னை ரயில் குன்டக்கல் செல்லும் நேரம் மாற்றம்
-
குழந்தையுடன் எரித்து கொல்ல முயற்சி காதலன் மீது இளம்பெண் 'திடுக்' புகார்