தென் ஆப்ரிக்காவை வென்றது நியூசிலாந்து

ஹராரே: ஜிம்பாப்வேயில், முத்தரப்பு 'டி-20' தொடர் நடக்கிறது. நேற்று, ஹராரேயில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் வான்டெர் துசென் (14), ஹென்ரிக்ஸ் (41) ஜோடி துவக்கம் தந்தது. ஹெர்மான் (10), பிரவிஸ் (13) நிலைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, மில்னே, சான்ட்னர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
நியூசிலாந்து அணிக்கு கான்வே (19), டிம் செய்பெர்ட் ஜோடி துவக்கம் தந்தது. சாப்மன் 10, ரச்சின் 3 ரன் எடுத்தனர். செய்பெர்ட் அரைசதம் விளாச, வெற்றி எளிதானது. நியூசிலாந்து அணி 15.5 ஓவரில் 135/3 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. செய்பெர்ட் (66), மிட்செல் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
மேலும்
-
வீரேந்திர ஹெக்டே பற்றி செய்தி வெளியிட தடை; 8,000 வீடியோக்களை அழிக்கவும் கோர்ட் உத்தரவு
-
பாகிஸ்தானுக்கான ஈரான் துாதரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்
-
கழுத்தை அறுத்து 7 வயது மகளை கொன்ற கொடூரம்; தற்கொலைக்கு முயன்ற தந்தை 'சீரியஸ்'
-
அரசு மருத்துவமனையில் கைதி வார்டுகள் தயார்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 23 க்குரியது
-
அஞ்சல் துறை பணிகளில் புது தொழில்நுட்பம் அறிமுகம்