உலக செஸ்: ஹம்பி, திவ்யா 'டிரா'

பதுமி: உலக கோப்பை செஸ், அரையிறுதியின் முதல் போட்டியில் ஹம்பி, திவ்யா 'டிரா' செய்தனர்.
ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.
'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஹம்பி, திவ்யா என இரு வீராங்கனைகள் முதன் முறையாக முன்னேறி, வரலாறு படைத்தனர்.
நேற்று தலா இரு போட்டி கொண்ட அரையிறுதி சுற்று துவங்கின. முதல் போட்டியில் உலகத் தரவரிசையில் 'நம்பர்-5' வது இடத்திலுள்ள ஹம்பி, 'நம்பர்-3' வீராங்கனை சீனாவின் லெய் டிங்ஜீ மோதினர்.
ஹம்பி கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். 17 வது நகர்த்தலில் சற்று பின்தங்கிய ஹம்பி, பின் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார். மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின், 38 வது நகர்த்தலில் இப்போட்டி 'டிரா' ஆனது. இருவரும் 0.5-0.5 என சம புள்ளியில் உள்ளனர்.
திவ்யா 'டிரா'
மற்றொரு அரையிறுதியில் உலகத் தரவரிசையில் 18வது இடத்திலுள்ள, 19 வயது வீராங்கனை திவ்யா, 'நம்பர்-8' ஆக உள்ள சீனாவின் வலிமையான ஜோங்இயை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் திவ்யா. இப்போட்டி 30 வது நகர்த்தலில் 'டிரா' ஆக, இருவரும் 0.5-0.5 என சம புள்ளி பெற்றனர்.
இன்று அரையிறுதி இரண்டாவது போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் வீராங்கனைகள் பைனலுக்கு செல்லலாம். மாறாக, மீண்டும் 'டிரா' ஆனால், நாளை 'டை பிரேக்கர்' முறையில் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார்.
மேலும்
-
வீரேந்திர ஹெக்டே பற்றி செய்தி வெளியிட தடை; 8,000 வீடியோக்களை அழிக்கவும் கோர்ட் உத்தரவு
-
பாகிஸ்தானுக்கான ஈரான் துாதரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்
-
கழுத்தை அறுத்து 7 வயது மகளை கொன்ற கொடூரம்; தற்கொலைக்கு முயன்ற தந்தை 'சீரியஸ்'
-
அரசு மருத்துவமனையில் கைதி வார்டுகள் தயார்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 23 க்குரியது
-
அஞ்சல் துறை பணிகளில் புது தொழில்நுட்பம் அறிமுகம்