ஊரக வளர்ச்சி துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விழுப்புரம் நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பொன்னன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலாஜி, ஸ்ரீராம், கபிர்தாஸ் முன்னிலை வகித்தனர். செயலாளர் முருகன் வரவேற்றார். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொது செயலாளர் சவுரிராஜன் கோரிக்கைகள் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் சங்கர், துணைச் செயலாளர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், கொரோனா கால தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு உத்திரவாதம் அளித்தபடி ஊக்க தொகை வழங்க வேண்டும்.

தற்காலிகமாக பணிபுரியும் அனைவருக்கும் பணிக்கொடை, சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சுகாதார ஊக்குநர் வள்ளி நன்றி கூறினார்.

Advertisement