மேகதாது திட்டத்தை சோனியாவிடம் சொல்லி நிறுத்த வேண்டியது தானே; திமுகவை கேட்கிறார் இ.பி.எஸ்.,

தஞ்சை: 'அதிமுக - பாஜ கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. 2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம்,' என்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது; நான் விவசாயி என்பதால், விவசாயிகள் சிரமங்கள், அனுபவ ரீதியாக எனக்கு தெரியும். மற்றவர்களைப் போல சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. உங்களின் பிரச்னைகள் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது நிவர்த்தி செய்யப்படும். இந்த டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாய நிலத்தை பாதுகாத்தது அதிமுக அரசாங்கம். இனி எந்த கொம்பனாலும் உங்களின் நிலத்தை பறிக்க முடியாது.
'எங்களுக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. கூட்டணி பலமாக இருக்கிறது' என்று போகும் இடம் எல்லாம் ஸ்டாலின் பேசுகிறார். ஒரத்தநாட்டில் வந்து பாருங்கள். பூமியே ஆடும் அளவுக்கு மக்களின் எழுச்சி உள்ளது. இப்படியிருக்கும் போது நீங்கள் எப்படி 200 இடங்களில் ஜெயிப்பீர்கள்? மாறாக, அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.
அமைச்சர் துரைமுருகன் சொல்கிறார். இ.பி.எஸ்., கூட்டணிக்கு கூவி கூவி அழைக்கிறார் என்றார். உங்கள் கூட்டணியை பாருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் கூட்டணி எந்த நேரத்தில் உடையும் என்றே தெரியவில்லை. அதிமுக ஐ.எஸ்.ஐ., முத்திரை மாதிரி. தனி செல்வாக்கு இருக்கிறது. அதேநேரத்தில் ஓரணியில் தமிழகம் என்று அவ்வளவு வயதிலும் வீடு வீடாக சென்று கதவை தட்டி பிச்சை எடுக்கறீங்க. எங்களைப் பற்றி விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது உங்களுக்கு? இந்தியாவில் எந்தக் கட்சியாவது வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்தி இருக்கிறதா? உறுப்பினர் சேர்க்கைக்கு பிச்சை எடுக்கும் கட்சி திமுக.
உங்களுடன் ஸ்டாலின் என்று ஊரு ஊராக செல்கிறார்கள். மக்களுக்கு 46 பிரச்னைகள் இருக்கிறது என்று தெரிகிறது அல்லவா, 4 ஆண்டுகள் அதை தீர்க்காமல் என்ன செய்தீர்கள். இன்னும் 8 மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் திமுக என்ற கட்சியே இருக்காது.
இண்டி கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறதாம். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி விட்டார்களாம். நீங்க சோனியாவிடம் பேசி, அந்த அணை கட்டுவதை நிறுத்தலாமல்ல? ஆனால், மக்கள் மீது அக்கறையில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருந்த போதும், தமிழக மக்களுக்கு பிரச்னை என்றதும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று 22 நாட்கள் பார்லிமென்டை ஒத்திவைத்தோம். அதிமுகவின் திறமை. விவசாயிகள் மீதான அக்கறை.
அதிமுக - பாஜ கூட்டணி வெற்றி பெறாது என்று சொல்கிறீர்களே. அப்புறம் ஏன் எங்கள் மீது எரிந்து விழுகிறீர்கள். அதிமுக - பாஜ கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. 2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம், இவ்வாறு அவர் கூறினார்.
பட்டுக்கோட்டையில் இ.பி.எஸ்., பேசியதாவது;
இன்று திமுக ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள். இந்த ஆட்சியில் யாருமே மருத்துவமனைக்கு செல்ல முடியாது போல. நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருடியிருக்காங்க. அரசு அதிகாரிகள் சோதனை நடத்தியதில், திமுக நிர்வாகிக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சிதார் மருத்துவமனைகளுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ., கதிரவனுக்கு இந்த மருத்துவமனை சொந்தமானது. கிட்னி திருடியதாக நான் சொல்லவில்லை. திமுக அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா?
ஜனநாயக ரீதியாக தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. கொள்கை வேறு. கூட்டணி வேறு.தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்போம். ஏனெனில் வாக்குகள் சிதறாமல், மக்கள் விரோத ஆட்சியை நீக்க வேண்டும் என்பதற்காகத் தான். திமுக கூட்டணி கட்சி தலைவர் (திருமா) எங்கள் கட்சியை பற்றியை கவலைப்பட வேண்டாம். உங்கள் கட்சியை காப்பாற்றி கொள்ளுங்கள்.
ஸ்டாலின் எங்கள் கட்சியை அழிக்க பார்த்தீர்கள். முடக்க பார்த்தீங்க. அனைத்து மக்கள் துணையோடு தவிடு பொடியாக்கினோம், இவ்வாறு பேசினார்.







மேலும்
-
இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு உறவினர் உட்பட 10 பேர் கைது
-
ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ. 6.10 லட்சம் 'அபேஸ்' சுற்றுலா பயணியுடன் நட்பாகி வாலிபர் கைவரிசை
-
எஸ்.பி., பொறுப்பேற்பு
-
பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது
-
சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆரோவில்லில் ஆய்வு
-
அன்புமணி ஆதரவாளர்கள் தி.மு.க., பேச்சாளர் மீது புகார்