எச்சரிக்கை பலகையால் வாகன ஓட்டிகள் நிம்மதி

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., சாலை வழித்தடத்தில் குட்டைமுக்கு மற்றும் காவிரி ஆகிய பகுதியில், கொண்டை ஊசி போன்று வளைவு பகுதி உள்ளது. பகல் நேரத்தில் வேகத்தடை இருப்பது தெரிவதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்றுவிடுகின்றனர். ஆனால், இரவில் வேகத்தடை இருப்பது தெரியாததால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வந்தனர்.

இதனால் வேகத்தடை இருப்பதை அறியும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என, கடந்த, 16ல் நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் மாலை, நான்கு பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இதனால் வாகன
ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.

Advertisement