நினைவரங்கம் திறக்கப்படுமா

புதுச்சத்திரம், 'முன்னாள் முதல்வர் சுப்பராயன் சேவையை நினைவுகூறும் வகையில், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தில் நினைவு அரங்கம் அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

அதை தொடர்ந்து, கடந்தாண்டு மே மாதத்தில் புதுச்சத்திரம் யூனியன், நவணி பஞ்., தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் நினைவரங்கம் கட்டும் பணியை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின், ஓராண்டாக நினைவரங்கம் கட்டுமான பணி நடந்து வந்த நிலையில், முற்றிலும் பணிகள் முடிந்து, தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.எனவே, முன்னாள் முதல்வரின் நினைவரங்கத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement