சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 வங்கதேசத்தினர் கைது
ஸ்ரீபெரும்புதுார்:மாங்காடு அருகே, வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி தங்கியிருந்த 19 பேருக்கு, மூன்று மாத சிறை தண்டனை விதித்து, ஸ்ரீபெரும்புதுார் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாங்காடு அருகே, சட்ட விரோதமாக குடியேறி, வசித்து வந்த, வங்கதேசத்தைச் சேர்ந்த, ஒன்பது ஆண் மற்றும் 10 பெண்களை, மாங்காடு போலீசார் கடந்த ஏப்.,29ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீபெரும்புதுார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதில், வங்கதேசத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி, சட்ட விரோதமாக குடியேறி தங்கியிருந்தது உறுதியானதை அடுத்து, வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேருக்கு, 3 மாதம் சிறை மற்றும் தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி விக்னேஷ் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்