'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 1,115 மனுக்கள் ஏற்பு

உத்திரமேரூர்:- காவனுார் புதுச்சேரியில் நடந்த, 'மக்களுடன் ஸ்டாலின்' முகாமில், 1,115 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

உத்திரமேரூர் தாலுகா, காவனுார் புதுச்சேரி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது.

உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். அதில், காவனுார் புதுச்சேரி, அகரம் துாளி, அத்தியூர் மேல்துாளி, நாஞ்சிபுரம், கம்மாளம்பூண்டி, மேனலுார் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.

இம்முகாமில், 1,115 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் 16 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement