ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ. 6.10 லட்சம் 'அபேஸ்' சுற்றுலா பயணியுடன் நட்பாகி வாலிபர் கைவரிசை
வானுார்: ஆரோவில்லில் சுற்றுலா பயணியுடன் நட்பாகி, அவருடைய ஏ.டி.எம்., கார்டை திருடி, ரூ.6.10 லட்சம் அபேஸ் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நவநரோடா பகுதியை சேர்ந்தவர் சத்தியபிரகாஷ் மகன் அனுராக்சிங், 25; இவர் கடந்த மாதம் 13ம் தேதி ஆரோவில்லை சுற்றி பார்க்க வந்தார். அங்குள்ள ஒரு விடுதியில் தங்கினார்.
அப்போது, அங்கு வந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அஜய் குரோபதி, 25; என்பவர் நட்பாக பழகினார். இருவரும் சேர்ந்து ஒரே அறையில் தங்கினர்.
அன்றைய தினம், இரவு 10:00 மணிக்கு, அனுராக்சிங் பார்த்தபோது, அஜய் குரோபதியை காணவில்லை. மேலும் அவர் வைத்திருந்த லேப்டாப், ரூ. 5 ஆயிரம், வங்கி ஏ.டி.எம்., கார்டு ஆகியவற்றை அவர் திருடி சென்றது தெரிந்தது. தொடர்ந்து, அவர் தன்னுடைய வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, அஜய் குரோபதி, அந்த ஏ.டி.எம்., கார்டு மூலம் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்திருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அனுராக் சிங், ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அஜய் குரோபதியை தேடி வருகின்றனர்.
மேலும்
-
அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி; ராஜஸ்தானில் சோகம்
-
கேரளாவில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
-
கிரிக்கெட் வீரர் யாஷ்தயாள் கைதாவாரா ?
-
கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சி வீடியோவால் வந்த வம்பு; சி.இ.ஓ.,வைத் தொடர்ந்து ஹெச்.ஆர்., ராஜினாமா!
-
தந்தையுடன் செல்ல ரூ.1 கோடி கேட்ட சிறுமி; தாயை கண்டித்த உச்ச நீதிமன்றம்
-
மாநகராட்சி கமிஷனர், துறை செயலருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்