சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆரோவில்லில் ஆய்வு

வானுார்:ஆரோவில்லில், சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆரோவில் அறக்கட்டளை, மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து புதிய வளாகத்தை நிறுவ உள்ளது.
இந்நிலையில், செ ன்னை ஐ.ஐ.டி., உயர்மட்ட பிரதிநிதிகளான இயக்குநர் காமகோடி, பேராசிரியர் ரஜ்னிஷ் குமார், ராபின்சன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆரோவில்வந்தனர்.
இக்குழுவினரை ஆரோவில் சிறப்பு அதிகாரி சீதாராமன், மூத்த ஆலோசகர் வேணுகோபால் ஆகியோர் வரவேற்றனர்.
ஐ.ஐ.டி., குழுவினர், பிரதிநிதிகள் குழுவால் முன்மொழியப்பட்ட சேதராப்பட்டில் நிலத்தை பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர்.
தொடர்ந்து, மாத்ரி மந்திர் சுற்றி மேற்கொள்ளப்படும் லேக் பணி, கிரவுன் சாலை பணிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
இயக்குநர் காமகோடி கூறுகையில், ஐ.ஐ.டி., வளாகமானது பசுமை ஆற்றல் தீர்வுகள், மின் வாகனங்கள், வணிக பயன்பாடுகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டார்.
ஐ.ஐ.டி., வளாகம் செயல்பாட்டுக்கு வரும் போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கத்தை தரும் என்று ஆரோவில் தரப்பில் குறிப்பிட்டனர்.
இந்த நிகழ்வின் போது, 6ம் வகுப்பு மாணவி நஸ்ரீன், தான் கையால் உருவாக்கிய பையை பரிசாக தந்தார்.
அதற்கு காமகோடி, பள்ளி படிப்புக்கு பிறகு ஐ.ஐ.டி.,யில் சேர வாருங்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
மேலும்
-
அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி; ராஜஸ்தானில் சோகம்
-
கேரளாவில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
-
கிரிக்கெட் வீரர் யாஷ்தயாள் கைதாவாரா ?
-
கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சி வீடியோவால் வந்த வம்பு; சி.இ.ஓ.,வைத் தொடர்ந்து ஹெச்.ஆர்., ராஜினாமா!
-
தந்தையுடன் செல்ல ரூ.1 கோடி கேட்ட சிறுமி; தாயை கண்டித்த உச்ச நீதிமன்றம்
-
மாநகராட்சி கமிஷனர், துறை செயலருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்