இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு உறவினர் உட்பட 10 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி, எல்லைப்பிள்ளைசாவடி சித்தானந்தா நகரை சேர்ந்தவர் துரை, 48; இந்து முன்னணி நகர செயற்குழு உறுப்பினர். இவர், கனகன் ஏரி அருகே மணல், ஜல்லி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு, ரேகா என்ற மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

துரை, தனது வீட்டில் நடந்து வரும் கட்டுமான பணிக்காக, நேற்று முன்தினம் தனது விற்பனை நிலையத்தில் இருந்த மணலை ஏற்றிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்ட துரையின் மனைவியான ரேகாவின் தாய் செல்வி இறந்தவிட்ட நிலையில், அவரது தந்தை திருவேங்கடம், இரண்டாவதாக சித்ரா என்பவரை திருமணம் செய்துள்ளார் .

தனது சொத்துகளை முதல் மனைவியின் மகளான ரேகாவுக்கும், இரண்டாவது மனைவிக்கும் சரிபாதியாக எழுதி கொடுத்தார். இரண்டாவது மனைவிக்கு 4 பிள்ளைகள் என்பதால், அவர்கள் கூடுதல் சொத்து கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது.

இதற்கிடையே, ரேகா குடும்பத்தினர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில், வீடு கட்டும் பணியில் ஈடுபட்டதால் எதிர் தரப்பி னருக்கு கோபம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், துரையை திருவேங்கடத்தின் இரண்டாவது மனைவியின் மகன் சூரியா, தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, எல்லப்பிள்ளைச்சாவடியை சேர்ந்த சூர்யா, 23; நாகராஜ், 25; குயவர்பாளையத்தை சேர்ந்த கவுதம், 20; ஸ்ரீநாத், 24; மணிமாறன், 22; திண்டிவனத்தை சேர்ந்த நரேஷ்குமார், 23; லாஸ்பேட்டையை சேர்ந்த அருள்பிரகாஷ், 25; கோவிந்தசாலையை சேர்ந் த கிருஷ் ணகுமார், 21; கொம்பாக்கத்தை சேர்ந்த டேனியல், 22 மற்றும் 17 வது சிறுவன் உட்பட 10 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பிறகே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisement