பைக் திருட்டு வாலிபர் கைது

ஏழுகிணறு, பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஏழுகிணறு, புனித சேவியர் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஜலாலுதீன், 40; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 12ம் தேதி இரவு, தன் 'ஹோண்டா ைஷன்' பைக்கை வீட்டின் முன் நிறுத்தி சென்றார்.

மறுநாள் காலை வந்து பார்த்தபோது, பைக் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து முகமது ஜலாலுதீன், ஏழுகிணறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், கொத்தவால்சாவடி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான, மண்ணடி, ஆசாரியப்பன் தெருவைச் சேர்ந்த கார்த்திக், 24, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் கார்த்திக்கை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கார்த்திக் மீது, கொத்தவால்சாவடி, எஸ்பிளனேடு, வடக்கு கடற்கரை, பூக்கடை காவல் நிலையங்களில், திருட்டு, கொள்ளை, வழிப்பறி, அடித்தடி உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில், தலைமறைவு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement