கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

11


புதுடில்லி: கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல கன்னட நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கியதற்கு சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.


கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 36; பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர். தர்ஷனின் நெருங்கிய தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பினார். இதையடுத்து, தர் ஷன், பவித்ரா கவுடா மற்றும் கூலிப்படையினர் சேர்ந்து, ரேணுகாசாமியை 2024 ஜூன் 8ல் அடித்து கொன்றனர்.


இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவருக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதில் தர்ஷன், பவித்ரா ஜாமினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த விதம் எங்களுக்கு வேதனை அளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்கும் வகையில், அவர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் செயல்பட்டு உள்ளது.மூன்று பக்கங்களுக்குள் எழுத்துபூர்வமான அரசின் வாதத்தை, ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement