வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகம் இடமாற்றம்

சென்னை,சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகம், சி.ஐ.டி., நகருக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழக வீட்டுவசதி வாரியத்தின் தலைமை அலுவலகம், நீண்ட காலமாக அண்ணா சாலை நந்தனத்தில் செயல்பட்டு வந்தது.

கடந்த, 2020ல், சி.எம்.டி.ஏ., சார்பில், கோயம்பேடு இ - சி சாலையில் புதிதாக அலுவலக வளாகம் கட்டப்பட்டும், வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகம் அங்கு மாற்றப்பட்டது.

வாடகை செலவு அதிகரித்த நிலையில், சி.ஐ.டி., நகரில் வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி வளாகத்துக்கு, இம்மாதம் 14ம் தேதி, வாரிய தலைமை அலுவலகத்தை மாற்றப்பட்டு உள்ளது.

வாரிய தலைமை அலுவலகத்தை, 'பாக்கெட் - 4, வாரிய அலுவலகம் மற்றும் வணிக வளாகம், சி.ஐ.டி., நகர் முதல் பிரதான சாலை, சென்னை - 600035' என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.

**

Advertisement