குறுமைய தடகள போட்டி செயின்ட் மேரீஸ் முதலிடம்

சேலம், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், சேலம் மாவட்டத்தில் பாரதியார் தின விளையாட்டு போட்டி, குறுமைய அளவில் நடக்கிறது. அதன்படி வாழப்பாடி குறுமைய அளவில் தடகள போட்டி, சேலம் காந்தி மைதானத்தில் ஆண்களுக்கு நேற்று முன்தினம் நடந்தது. அதில் அம்மாபேட்டை ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி முதலிடம் பிடித்தது.

நேற்று பெண்களுக்கு தடகள போட்டி நடந்தது. 60 பள்ளிகளில் இருந்து, 460 மாணவியர் பங்கேற்றனர். 100, 200, 400, 1,500, 3,000 மீ., ஓட்டம், உயரம், நீளம் தாண்டுதல், வட்டு, குண்டு, ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் ஏ.என்.மங்கலம் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. மேலும் அனைத்து பிரிவுகளிலும் முதல் இரு இடங்களை பிடித்தவர்கள், மண்டல போட்டிக்கு தேர்வாகினர்.

Advertisement