பெரியார் பல்கலையின் பல்வேறு ஆய்வுக்கு ரூ.1.32 கோடி ஒதுக்கீடு

ஓமலுார், சேலம் பெரியார் பல்கலை, நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் அய்யாசாமி, பாறை கழிவில் இருந்து செடிகள் வளர்த்தல் குறித்தும், நிலவியல் துறை பேராசிரியர் வித்யாசாகர், தென்னிந்திய நிலப்பகுதியில் இருந்து கடலுக்கு சென்றடையும் நீர் மாசுபாடுகள், மனித உடல் நலத்துக்கு ஏற்படுத்தும் விளைவு குறித்தும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

ஆற்றல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியர் இளங்கோ, சூரிய மின்கலம் தயாரித்தல் குறித்தும், இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பழனிவேல், நீர் தொழில்நுட்பம் குறித்தும், இயற்பியல் துறை ஆய்வு மாணவர் ஸ்டான்லி தினகரன், நீர் சுத்திகரிப்பு அமைப்பின் மேம்பாடு குறித்தும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இந்த ஆய்வுகள், தமிழக அரசின் முதல்வர் ஆராய்ச்சி நிதி நல்கை ஆய்வு திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, பல்கலைக்கு, 1.32 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஆய்வு மாணவரை, பெரியார் பல்கலை நிர்வாக குழு உறுப்பினர் சுப்ரமணி, ஜெயந்தி பாராட்டினர்.

Advertisement