பூம்புகாரில் ஆடி திருவிழா சிறப்பு கண்காட்சி விற்பனை
சேலம், சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி, வள்ளுவர் சிலை அருகே உள்ள பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை நிலையத்தில், சிறப்பு கண்காட்சி, விற்பனை நேற்று தொடங்கியது. வரும், 31 வரை நடக்க உள்ளது.
இதுகுறித்து விற்பனை நிலைய மேலாளர் நரேந்திர போஸ் கூறியதாவது:
ஆடி திருவிழாவையொட்டி நடக்கும் கண்காட்சியின் சிறப்பம்சமாக பஞ்சலோகம், பித்தளை, கருங்கல், மண், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட, பல்வேறு வித மாரியம்மன் சிலைகள், 720 முதல், 2.15 லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளன. காளியம்மன், அன்னபூரணி, விநாயகர், கிருஷ்ணர், சிவன் பார்வதி, நடராஜர் சிலைகள், பலவித வடிவங்கள், அளவுகளில் விற்கப்படுகின்றன.
தவிர விளக்குகள், ஓவியங்கள், மரச்சிற்பங்கள், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு பொருட்கள், மருத்துவ மசாஜ் கருவிகள், பொம்மைகள் விற்கப்படுகின்றன. 100 முதல், 10,000 ரூபாய் மதிப்பில் பொருட்கள் உள்ளன. கண்காட்சியை மக்கள் பார்வையிட்டு, கைவினை பொருட்களை
வாங்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்